கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, பலர் வேலை வாய்ப்பை இழந்தனர்.


இந்நிலையில் தற்போது மீண்டும் ஊரடங்கு ஏற்படுத்தப்படவே, அனைத்து துறையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு, வேலைவாய்ப்புகள் ஆங்காங்கே அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், படித்த இளைஞர்களுக்காக வெளியிடப்படும் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை செய்திகளாக தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம்.


அந்த வகையில்,

இன்றைய தின வேலைவாய்ப்பு குறித்த பதிவை பின்வருமாறு காணலாம். 

இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தில் காலியாக உள்ள 180 ஜூனியர் எக்சிகியூட்டிவ் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதி பி.இ ( சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்), பி.டெக். சம்பளம் மாதம் ரூபாய் 1,40,000 வரை. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 2. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.aai.aero என்ற இணையதளத்திற்கு செல்லவும்.