அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கணினி தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக் உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.


நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

பணி : கணினி தொழில்நுட்பவியலாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : B.E, B.Tech, M.E, M.Tech உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


ஊதியம் : ரூ.25,000 மாதம்


விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகார பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 31.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.